கச்சிராயபாளையம் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
ADDED :256 days ago
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
கச்சிராயபாளையத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலின் மயான கொள்ளை திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்து இரவு நேரங்களில் வீதி உலா நடத்தப்பட்டு கடந்த 27ம் தேதி மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை கோமகி ஆற்றங்கரையில் தீ மிதிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தீமிதித்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.