உத்திரமேரூர் சுந்தரவரதர் கோவிலில் தெப்போத்சவம் விமரிசை
ADDED :246 days ago
உத்திரமேரூர்; உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயகி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்தாண்டிற்கான மாசி மாத தெப்போத்சவ விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக துவங்கியது. தெப்போத்சவ விழாவின் முதலாம் நாளான நேற்று முன்தினம் இரவு, சுந்தர வரதராஜ பெருமாள் நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆனந்தவல்லி நாயகி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து, தெப்பத்தில், சுந்தர வரதராஜ பெருமாள் ஆனந்தவல்லி நாயகி தாயாருடன் எழுந்தருளி, கோவில் குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.