உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளவனுார் அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேரோட்டம்

வளவனுார் அங்காளபரமேஸ்வரி கோவிலில் தேரோட்டம்

விழுப்புரம்; வளவனுார் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. வளவனுார் குமாரபுரி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், 246வது ஆண்டு பிரமோற்சவம், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயான கொள்ளை உற்சவத்தையொட்டி, மதியம் 1:00 மணிக்கு சிம்ம வாகனத்தில், அங்காளம்மன், பாவாடைராயன் வீதியுலா நடந்தது. இரவு 11:00 அம்மன் மயானத்துக்கு சென்று, மயான கொள்ளை உற்சவம் நடந்தது. தேரோட்ட விழாவான நேற்று காலை 11:00 மணிக்கு அங்காளம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 2:30 மணிக்கு, தங்க கவச அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு, பாண்டி ரோடு, தக்கா தெரு வழியாக சென்று, கோவிலில் நின்றது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா கலிவரதன் தலைமையில் அறங்காவலர் குழுவினர், குமாரபுரி பொது மக்கள் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று 5ம் தேதி மஞ்சள் நீராட்டும், 12ம் தேதி இரவு மகா கும்ப படையல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !