வடபழனியில் ராகவேந்திர சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம்
ADDED :296 days ago
சென்னை; வடபழனி, அழகிரி நகரில் ஜகத்குரு மத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானம் நங்சங்கூடு ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவன சன்னிதானத்தின் வடபழனி மந்த்ராலயம் அமைந்துள்ளது. அங்கு, ராகவேந்திர சுவாமிகளின் அவதார திருநாள், ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, கடந்த 1ம் தேதி முதல், இன்று வரை சுவாமிகளின் சப்தாஹ மகோத்சவமாக நடத்தப்பட்டது. ராகவேந்திர சுவாமிகளின் நட்சத்திர அவதார திருநாளும், விழாவின் நிறைவு நாளுமான இன்று, சிறப்பு ஹோமம், விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.