ரத்தினகிரி குமரக்கடவுள் என்கிற மருதாசல கடவுள் முருகன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :245 days ago
கோவை; சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ரத்தினகிரி குமரக்கடவுள் என்கிற மருதாசல கடவுள் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று மாசி மாதம் 25ம் நாள் காலை நடைபெற்றது. இதில் கும்ப கலசத்திற்கு புனித நீரை கோவை சிரவைஆதீனம் நான்காம் பட்டம் குரு மகா சன்னிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூராதீனம் 25 ம் பட்டம் குரு மகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இதில் மூலவர் முருகப்பெருமான் சிறப்பு புஷ்ப அலங்காரம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.