உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னசேலம் காமாட்சி அம்மன் கோவிலில் தேரோட்டம் விமர்சை

சின்னசேலம் காமாட்சி அம்மன் கோவிலில் தேரோட்டம் விமர்சை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் திரு தேரோட்ட விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம்,  சின்னசேலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஸ்ரீ கங்காதீஸ்வரர், ஸ்ரீ தேவி பூதேவி, உள்ளிட்ட நான்கு கோவில்களில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது, இந்த தேரோட்டமானது கடந்த 8ம் தேதி அன்று காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. விழாவில் காமாட்சி அம்மனுக்கு  பால், பன்னீர்,தயிர், உள்ளிட்ட வாசனை திரவியங்களைக் கொண்டு பல்வேறு அபிஷேகம், பெருமாள் அபிஷேகம், யாகசாலை பூஜையுடன்,அம்மன் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, இன்று தேரோட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது. காமாட்சி அம்மன் திருத்தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த தேரோட்டத்தில் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !