நவசக்தி விநாயகர் கோவில் 30ம் ஆண்டு விழா
ADDED :292 days ago
திருப்பூர்; திருப்பூர் – அவிநாசி ரோடு, தேவாங்கபுரம் அருகே, புஷ்பா தியேட்டர் ஸ்டாப்பில் நவசக்தி விநாயகர் கோவிலில், 30 ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. கோவில் கோபுரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மத அடையாள சின்னங்களுக்கு கற்பூரம், தீபாராதனை காண்பித்து ஆண்டு விழா துவங்கியது. நவசக்தி விநாயகருக்கு கணபதி ேஹாமம், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது. ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களும் விழாக்குழுவில் இணைந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை ஒற்றுமையுடன் செய்தனர்.