ஊட்டி மாரியம்மன் கோவில் திருவிழா; அம்மனுக்கு ஆதிபராசக்தி அலங்காரம்
ADDED :226 days ago
ஊட்டி; ஊட்டி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா துவங்கியது. ஊட்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஏப்., இரண்டாவது வாரம் வரை பல வேறு சமூகத்தை சேர்ந்தவர்களால் உபயம் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தேர் பவனி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 14ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 16ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, நீலகிரி மாவட்ட ஒக்கலியர் சமூகத்தினரின் உபயம் நடந்தது. அதில், ஸ்ரீ ஆதிபராசக்தி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். கோவில் முன்பு துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.