வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :221 days ago
கள்ளக்குறிச்சி; வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாத, சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. விஸ்வக்சேனர் பூஜை, கலச ஆவாஹனம் நடத்தி, வரதராஜ பெருமாளுக்கு விசேஷ திரவியம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திர பாராயணத்திற்குப்பின், மகா தீப ஆராதனையும் தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டை, அர்ச்சகர் சிவசுப்ரமணி செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.