காளஹஸ்தி சிவன் கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்
ADDED :295 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம் செய்ய இன்று வந்தார். வாயுதலமாக சிறந்து விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி மற்றும் அதிகாரிகள் கோயில் மரியாதையாக பூர்ண கும்ப வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர் தனது சீடர்களுடன் இன்று காலை மூன்றாம் கால அபிஷேகத்தில் பங்கேற்றார். பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள மேத குருதக்ஷிணாமூர்த்தி சன்னதியில், ஸ்ரீ காஞ்சி பீடத்தின் தலைவரான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிஜிக்கு, ஸ்ரீ காளஹஸ்தி சுவாமி மற்றும் ஸ்ரீ ஞானப் பிரசுனாம்பாவின் திருவுருவப்படம், அங்கியுடன் கௌரவிக்கப்பட்டு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் கோயில் அதிகாரிகள் வழங்கினர்.