சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
ADDED :195 days ago
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயில் பிரமோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செண்டை மேளம் முழங்க கருட உருவம் பொறித்த கொடியை சப்பரத்தில் வைத்து பக்தர்கள் ரத வீதிகளை சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. கொடி மரத்திற்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு தீபாராதனை நடந்தன. முதல்முறையாக ஏப்.4 இரவு பட்டுப் பல்லாக்கு, ஏப்.5ல் திருக்கல்யாணம், 7 ல் ராமநவமி, 8 ல் புஷ்பயாகம், 9 ல் விடையாற்றி உற்ஸவம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் இரவு 7:00 மணிக்கு குதிரை, சிம்மம், கருட, சேஷ வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கும்.