பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் யுகாதி பஞ்சாங்கம் வாசிப்பு
ADDED :269 days ago
பழநி; பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை முன்னிட்டு வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தீபாராதனைக்கு பின் செல்வ சுப்பிரமணிய குருக்கள் பஞ்சாங்கம் வாசித்தார். அதில் விசுவாவசு ஆண்டு பலன், திதி, வார, ராசி, நட்சத்திரம், யோக, காரண பலன்கள், இந்த ஆண்டு சிறப்பு பலன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார். கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி, சித்தநாதன் அண்ட் சன்ஸ் செந்தில்குமார், நெய்க்காரப்பட்டி அரிமா சங்க சுப்புராஜ் பங்கேற்றனர்.