வசந்த நவராத்திரி; ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் சிறப்பு பூஜை
                              ADDED :204 days ago 
                            
                          
                          
கோவை; உகாதி பண்டிகை மற்றும் வசந்த நவராத்திரி விழா துவக்கத்தை முன்னிட்டு கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் துர்கா -லட்சுமி -சரஸ்வதி முப்பெரும் தேவியர்களுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் வெள்ளி காப்பு கவசத்தில் தேவியர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.