/
கோயில்கள் செய்திகள் / மங்களப்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
மங்களப்பட்டி முத்து மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :268 days ago
செந்துறை; நத்தம் அருகே சிரங்காட்டுபட்டி ஊராட்சி மங்களப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் கடந்த மார்ச் 23-ம் தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.பின்னர் விழாவில் பக்தர்கள் காலையில் பொங்கல் வைத்தும், மாலையில் அலகுவேல் குத்தி பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை மங்களப்பட்டி ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.