விருச்சிகம்: நிறைந்த நிம்மதி!
களைப்பின்றி எந்நேரமும் உழைத்திடும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நற்பலன் வழங்கும் கிரகங்களாக செவ்வாய், கேது, குரு செயல்படுகின்றனர். ராசியில் உள்ள சுக்கிரன் தன் பங்கிற்கு நல்ல பலன்களை வழங்குகிறார். உங்கள் செயல்களில் ஆடம்பரத்தின் வெளிப்பாடு நிறைந்திருக்கும். நிறைவேற்ற வேண்டிய பணிகளை அதிக முயற்சியால் பூர்த்தி செய்வீர்கள். அந்தஸ்தை உயர்த்தி எதிரிகளை பிரமிப்பு அடையச் செய்வீர்கள். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி சீராக இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் உங்கள் மீது இருந்த நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் செயல்படுவீர்கள். புத்திரர்கள், நண்பர்கள் போல உங்களிடம் சகஜமாக நடந்துகொள்வர். அவர்களின் புத்தி சாதுர்ய செயல்களைக் கண்டு மகிழ்வீர்கள். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. உடல்நலம் பலமுடன் இருக்கும். கணவன், மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நிம்மதியை நிலைநாட்டுவர். உங்களின் திறமைகளை வெளி உலகுக்கு கொண்டுவர நண்பர்கள் உதவுவர். தொழிலதிபர்களுக்கு லாபம் சுமாராக இருக்கும். நடைமுறைச்செலவு, மூலதனத்தேவை குறையும். வியாபாரிகளுக்கு விற்பனை சரிவால் லாபம் குறையும். பணியாளர்களுக்கு வழக்கமான நிலை தொடரும். பணவரவில் சிறு அளவில் சரிவு உண்டு. குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவை சிக்கனமாக செய்ய வேண்டியிருக்கும். கணவர், குழந்தைகளின் நற்போக்கினால் மனம் நிம்மதியாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பணிகளில் தொய்வு ஏற்படும். ஓரளவு சலுகை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் புதிய ஆர்டர் கிடைக்கப்பெறுவர். உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.அரசியல்வாதிகள் எதிர்ப்புகளை சமாளித்து தங்கள் பணிகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் நல்ல லாபம் உண்டு. மாணவர்களின் படிப்பு பின்தங்கலாம். கவனத்துடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் செயல்கள்
தடையின்றி நிறைவேறும்.
உஷார் நாள்: 27.12.12 பகல் 2.09 முதல் 30.12.12 அதிகாலை 1.14 வரை
வெற்றி நாள்: ஜனவரி 12, 13
நிறம்: சந்தனம், பச்சை எண்: 3, 4