உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது இதில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


பிரசித்தி பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். இங்கு ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் நடக்கும் 10 நாள் பெருவிழா விடையாற்றி கலை விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வர். இந்நிலையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இந்தாண்டு பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக நேற்று ஏப்.2ம் தேதி கிராம தேவதை பூஜை நடைபெற்றது. இன்று காலை கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்க உள்ளார். ஏப்ரல் 9ம் தேதி தேரோட்டமும், ஏப்ரல் 10ல் அறுபத்து மூவர் வீதியுலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !