திருப்பதியில் தங்க தேரோட்டம்; வசந்த உற்சவத்தில் பக்தர்கள் பரவசம்
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருமலையில் உள்ள வசந்தோத்சவ மண்டபத்தில் நேற்று ஸ்ரீவாரி வசந்தோத்சவம் பிரமாண்டமாகத் தொடங்கியது. வசந்தோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்ற ஏப்ரல் 11 அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை, ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீ பூ சமேதருடன், தங்க தேரில் திருமட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின் வசந்தோத்சவ மண்டபத்தில் வசந்தோத்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீபெரிய ஜீயர் சுவாமி, ஸ்ரீ சின்ன ஜியர் சுவாமி, கூடுதல் அலுவலர் சி.எச். வெங்கையா சௌத்ரி, துணை அலுவலர் லோகநாதம், பேஷ்கர் ராம கிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.