உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் குவிந்த பக்தர்கள்; காவடி எடுத்து நேர்த்திக்கடன்

குன்றக்குடியில் குவிந்த பக்தர்கள்; காவடி எடுத்து நேர்த்திக்கடன்

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.2ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு 8 மணிக்கு சண்முகநாதன் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிக்கேடகத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப். 9ம் தேதி தெப்பத் திருவிழாவும், ஏப்.10ல் தேரோட்டமும் நடைபெற்றது. இன்று ஏப். 11ல் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !