பிள்ளையார்நத்தம் காமாட்சியம்மன், கன்னிமூல கணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :228 days ago
சின்னாளபட்டி; பிள்ளையார்நத்தத்தில் காமாட்சியம்மன், கன்னிமூல கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில், கிராம தெய்வங்களுக்கு கனி வைத்தல், தீர்த்தம் அழைப்பு, கணபதி ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.