/
கோயில்கள் செய்திகள் / திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா; அலைமோதிய பக்தர்கள்
திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா; அலைமோதிய பக்தர்கள்
ADDED :181 days ago
திருத்தணி : திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காலை, 11 மணிக்கு மலைக் கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் உற்சவருக்கு பால், பன்னீர் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் அணிவித்து பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகர், வள்ளி மற்றும் தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக மலைக் கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டனர்.