உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலை; பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 


அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமியன்று, பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி இன்று பங்குனி பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவில் ராகோபுரம் தரிசனம் செய்து விட்டு  பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வழியேங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !