ராமேஸ்வரத்தில் தமிழ்ப்புத்தாண்டு: தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா
ADDED :542 days ago
ராமேஸ்வரம்; தமிழ்ப்புத்தாண்டையொட்டி ராமேஸ்வரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்தனர். நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள்சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். அங்கு கூடியிருந்த பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் சுவாமி, அம்மன் கோயில் ரதவீதியில் உலா வந்தனர்.