சங்கடஹர சதுர்த்தி பூஜை; விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :541 days ago
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முன்பு தெப்பக்குளம் கரையில் அமைந்துள்ள கைலாச விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தாலுகா அலுவலக அதிர்ஷ்ட விநாயகர், பாரதிநகர் கற்பக விநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையார் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.