உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவிற்காக தேரை சுத்தப்படுத்தும் பணி

அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர் திருவிழாவிற்காக தேரை சுத்தப்படுத்தும் பணி

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்காக, தண்ணீர் பீய்ச்சி அடித்து தேர் கழுவும் பணிகள் தொடங்கியது. கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதும் ஆசியாவில் மூன்றாவது தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர் விழா தொடங்குகிறது. இதற்காக நேற்று முன்தினம் தேரை அலங்கரிக்கும் பணிகளில் ஒரு பகுதியாக இரும்பு சாரம் அமைக்கும் பணிகள் துவங்கியது. நேற்று பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகிய இரண்டையும் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடந்தது. வரும் நாட்களில் வார்னிஷ் அடித்து புத்தம் புதிய பொலிவுடன் தேர் காட்சியளிக்கும் என செயல் அலுவலர் சபரீஷ் குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !