உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் வசந்த உற்சவம்
ADDED :227 days ago
உடுமலை; உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் நடந்த வசந்த உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், இன்று வசந்த உற்வசம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தையொட்டி அம்பாளுக்கு, 32 வகையான அபிேஷக திரவியம், 32 வகையான மலர்கள் சாத்தி, 32 வகையான நெய்வேத்தியம் வைத்து, தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. வசந்த உற்சவத்தையொட்டி நடந்த இந்த சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.