உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 108 கிலோ மலர் வழிபாடு

பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 108 கிலோ மலர் வழிபாடு

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பேரூர் சதய விழா குழு சார்பில், 108 கிலோ பூக்களை கொண்டு மலர் வழிபாடு நடந்தது. பேரூர் சதய விழா குழு சார்பில், பட்டியப்பனார் நினைவாக, பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு சித்திரை மாத மலர் வழிபாடு நேற்று நடந்தது. மல்லிகை, முல்லை, தாமரை, அரளி செண்டுமல்லி உள்ளிட்ட, 20 வகையான, 108 கிலோ மலர்களை, பேரூர் திருவாவடுதுறை ஆதின மட கிளையில் வைத்து தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர்களுடன், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து, நேற்று இரவு, பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு மலர் வழிபாடு செய்யப்பட்டது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !