உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன், கருப்பராயர், குரு சக்தி நாதர் கோவிலில் அம்மன் உலா

பத்ரகாளியம்மன், கருப்பராயர், குரு சக்தி நாதர் கோவிலில் அம்மன் உலா

கோவை; கோவை புதூர் பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன், கருப்பராயர், குரு சக்தி நாதர் கோவில் 16ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 23ம் தேதி புதன்கிழமை துவங்கியது. இதையொட்டி  காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. அடுத்த நிகழ்வாக சக்தி கன்னி பூஜை, கோ பூஜையை தொடர்ந்து கொடியேற்றம், காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதையடுத்து குருதி பூஜையை தொடர்ந்து சண்டி பூஜை, ஹோமம் ஆகியன நடைபெற்றது. தொடர்நது கருப்புசாமி விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !