உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டுக்குடிப்பட்டியில் பூச்சொரிதல் விழா

கட்டுக்குடிப்பட்டியில் பூச்சொரிதல் விழா

எஸ் புதுார்;  எஸ்.புதுார் அருகே கட்டுக்குடிப்பட்டி செல்வவிநாயகர், மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. காலை 7:45 மணிக்கு கோயில் முன்பாக உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தி அம்மனை வழிபட்டனர். இரவு 12:00 மணிக்கு பெண்கள் ஊர்வலமாக ஆரத்தி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். அதிகாலை 3:00 மணிக்கு பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !