அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சி
ADDED :213 days ago
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா 5ம் நாளான நேற்று 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சியளிக்கும் வைபவம் கோலாகலமாக நடந்தது. மூஷிக வாகனத்தில் விநாயகப் பெருமானும், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், காமதேனு வாகனத்தில் கருணாம்பிகை அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய பெருமானும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் நான்கு ரத திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.