உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குதிரை வாகனத்தில் கும்ப நதியில் இறங்கிய திண்டுக்கல் சவுந்தரராஜ பெருமாள்

குதிரை வாகனத்தில் கும்ப நதியில் இறங்கிய திண்டுக்கல் சவுந்தரராஜ பெருமாள்

திண்டுக்கல்; தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் சார்பில்  அழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்கள் முழங்க பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்.


திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 12 ம் தேதி  தொடங்கி வருகிற 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக  தாடிக்கொம்பு அழகர் சன்னதியில் இருந்து பச்சை பட்டு உடுத்தி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி குடகனாற்று கரையில் கும்ப நதியில் காலை 7.20 மணிக்கு எழுந்தருளும் போது ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் முழங்கி மலர் தூவி அழகரை வரவேற்றனர்.  மேலும் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது . ஆற்றங்கரையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அழகர் செல்லும் வழி எல்லாம் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து  பல்லக்கில் சுவாமி

புறப்பாடாகி முக்கிய மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள் பாலிப்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !