உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ரெணகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்; சிம்மவாகனத்தில் அம்மன் பவனி

பழநி ரெணகாளியம்மன் கோயிலில் தேரோட்டம்; சிம்மவாகனத்தில் அம்மன் பவனி

பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ரெணகாளியம்மன் கோயில் புது தாராபுரம் சாலையில் உள்ளது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 6 ல் சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மே 13 ல் பொன் ஆபரண பெட்டி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. (மே 14)நேற்று அம்மனுக்கு மா விளக்கு எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டது. மாலை வெள்ளி சிம்மவாகனத்தில் தேரில் அம்மன் எழுந்தருளினார். முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இன்று முளைப்பாரி எடுத்து வருதல், அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்று சக்தி கரகத்தை கங்கையில் சேர்த்து விழா நிறைவடையும்.கோயில் நிர்வாகம் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறது.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !