உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் குருதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் குருதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பதி; காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோயிலில் குருதட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள குரு தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, யாக பூஜைகள் நடத்தப்பட்டன‌ பின்னர் குரு தக்ஷிணாமூர்த்திக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள்நடத்தப்பட்டன.  அபிஷேகங்களை தொடர்ந்து தீப தூப ஆராதனைகள் நடந்தன.  இதில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !