உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காடம்பாறை மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

காடம்பாறை மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

வால்பாறை;  காடம்பாறை மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை அடுத்துள்ளது காடம்பாறை மின் நிலையம். இங்குள்ள விநாயகர், மாரியம்மன்  கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. முன்னதாக முதல் கால யாக வேள்வி நடந்தது. பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், முளைப்பாரி எடுத்து  பக்தர்கள் ஊர்வலாக கோவிலுக்கு வந்தனர். இரண்டாம்கால யாக வேள்வி, மூலமந்திர ஹோமம், தீபாராதனையும் நடைபெற்றது.  அதனை தொடர்ந்து, காலை, 8:30 மணிக்கு நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. காலை, 9:00 மணிக்கு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்தை, பக்தர்கள் எடுத்து கோவிலை வலம் வந்த பின், 9:15 மணிக்கு விமான கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.  மதியம், 12:00 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் நுாற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !