கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்
ADDED :157 days ago
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி, அம்மன் நகர், ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகரின் தேரோடும் வீதியின் வழியாக பெருமாள் சமேத சுவாமி புறப்பாடு வைபவம் நடந்தது.