திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு
ADDED :161 days ago
கடலுார்; கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்திப் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி இன்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், உற்சவர் பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு நந்தி பகவானுக்கு அரிசி மாவு, தேன், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உட்பட 21 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பிரதோஷ நாயகர், கோவில் உள் புறப்பாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.