உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம்

தஞ்சை; தஞ்சை பெரிய கோவிலில் வைகாசி சனிப்பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 


தஞ்சாவூர், உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியக்கோவிலில் மகா நந்தியம் பெருமானுக்கு, மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இன்று வைகாசி சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, மகா நந்தியம் பெருமானுக்கு, திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர், பழவகைகள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு தீபாரதனை காட்டப்பட்டது, சனிப்பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். இதனால் இன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.  பிரதோஷ அபிஷேகத்தை பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !