உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் உழவாரப்பணி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் உழவாரப்பணி

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில் உழவாரப்பணி நடந்தது. 


தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு  இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்  செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் கடந்த சனிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உழவாரப்பணியை செய்தது. காலை 9:30 மணிக்கு துவங்கிய இப்பணியில் ஏராளமானோர் கோயில் வளாகம், சிலைகள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து இறைப்பணியில் ஈடுபட்டனர். திருக்கோயில் சுற்றுச்சுவர் வெளிப்புறம், மாடவீதிகள், திருக்குளம், நந்தவனம், அன்னதான கூடம் திருத்தேர் வளாகம், கோசாலை உள் மற்றும்  வெளி பிரகாரங்கள் தூய்மை செய்தல் நடைபெற்து. உழவாரப்பணியில் விழிப்புணர்வு திருவீதியுலா, உழவாரப்பணி (தூய்மை செய்தல்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் தவிர்க்கும் வகையில் துணிப்பை வழங்குதல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி  அடியார்கள் இணைந்து திருநீறு தரித்து உலக நலன் வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது. 


தொடர்புக்கு: எஸ். கணேசன்  9840 123 866. நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !