வைகாசி திங்கள்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :502 days ago
கோவை; வைகாசி மாதம் இரண்டாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவில் அமைந்துள்ள ஸ்ரீ ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.