உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் மழை பெய்தால் அனுமதி இல்லை; வனத்துறை அறிவிப்பு

சதுரகிரியில் மழை பெய்தால் அனுமதி இல்லை; வனத்துறை அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்று ( மே.27) காலை மழை நிலவரத்தைப் பொறுத்தே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்தார். கடந்த 2 நாட்களாக பக்தர்களுக்கு மலையேற அனுமதி இல்லை என வனத்துறை அறிவித்த நிலையில், நேற்று இரவு வரை கோயில் மலைப்பகுதியில் இடைவிடாமல் சாரல் மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று (மே 27) காலை மழையின் நிலவரத்தை பொறுத்தே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஓடைகளில் நீர் வரத்து ஏற்பட துவங்கியுள்ளதால் பக்தர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டுமென வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !