உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோவிலில் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி!

ஆண்டாள் கோவிலில் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று, பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, பகல்பத்து உற்வசம் துவங்கியது. ஆண்டாள், ரெங்கமன்னார், மூலஸ்தானத்திலிருந்து, பகல் பத்து மண்டபத்திற்கு புறப்பட்டனர். அங்கு, பெரியாழ்வார் வம்சா வழியை சேர்ந்த வேதப்பிரான் பட்டர் திருமாளிகையில், காய்கள் பரப்பி வைத்து, அம்பாள், சுவாமிக்கு சீதனமாக வழங்கப்பட்டது. இதன் பின், கடலை பருப்பு, பால் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. டிச., 24ம் தேதி, காலை, 7.05 மணிக்கு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

3 கிலோ தங்கம்: ஆண்டாள் கோயில் தங்க விமானம் பணிக்காக, சென்னையை சேர்ந்தவர், 3 கிலோ தங்கம், 10 லட்சம் ரூபாய் வழங்கினார். நாச்சியார் டிரஸ்ட் சார்பில், ஆண்டாள் கோயில் விமானம், தங்கமயமாக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல பக்தர்கள், நன்கொடை வழங்கி வருகின்றனர். சென்னை ஒரக்கடத்தைசேர்ந்த ஆண்டாள் சொக்கலிங்கம், கடந்த நவம்பரில், தனது நண்பர்கள் மூலம் திரட்டிய, ஒரு கிலோ தங்கத்தை வழங்கினார். இந்நிலையில் பொதுமக்களிடம் பெற்ற மூன்று கிலோ தங்கம்,10 லட்ச ரூபாயை, கோயில் தக்கார் ரவிச்சந்திரனிடம் நேற்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !