பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
செஞ்சி; பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம் மற்றும் திருத்தேர் விழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 26ஆம் தேதி திங்கட்கிழமை செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்குகாப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து வானவேடிக்கையுடன் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அஞ்சாஞ்சேரி கிராமத்தில் இருந்து தாய் வீட்டு சீதனம் சீர்வரிசியாக கொண்டு வந்தனர். கோவிலில் உற்சவர் கிருஷ்ணன் முன்னிலையில், அர்சுனன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இம்மாதம் 31ஆம் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியும், ஜூன் 3 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், 4 ஆம் தேதி துரியோதனன் படுகளமும், தீமிதி விழாவும், 5 ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது.