காளியப்ப மசராய பெருமாள் கோவில் உற்சவ திருவிழா
ADDED :149 days ago
சூலூர்; நாகமநாயக்கன் பாளையம் ஸ்ரீ காளியப்ப மசராய பெருமாள் கோவில் உற்சவ திருவிழா பக்தி பரவசத்துடன் நடந்தது.
சூலூர் அடுத்த நாகமநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ காளியப்ப மசராய பெருமாள் கோவில் பழமையானது. கடந்த, 22 ம் தேதி மாலை, காப்பு கட்டுதலுடன் உற்சவ திருவிழா துவங்கியது. தினமும் பெருமாளுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அம்மன் அழைத்தல், சுவாமி ஆற்றுக்கு செல்லும் வழிபாடுகள் நடந்தன. நேற்று மதியம் உற்சவருக்கு புனித ஸ்தலங்களின் தீர்த்த அபிஷேகம் நடந்தது. அலங்கார பூஜைக்கு பின், திருக்கல்யாண உற்சவ யாகம் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் வழிபாடு நடந்தது. மாவிளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.