ரத்தினகிரி காளியம்மன் கோயில் திருவிழா; மாவிளக்கு வழிபாடு
ADDED :149 days ago
சின்னாளபட்டி; ஆலமரத்துப்பட்டி அருகே ரத்தினகிரியில், காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய விழாவில், கிராம தெய்வங்கள் வழிபாடு, கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மஞ்சள் நீர் ஊர்வலத்தை தொடர்ந்து, மஞ்சள் நீராடல் நடந்தது.