திண்டிவனம் கெங்கை அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :147 days ago
திண்டிவனம்; திண்டிவனம் கெங்கை அம்மன் கோவிலில் திருக் கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம் தீர்த்த குளத்தில் எழுந்தருளியுள்ள கங்கை அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா கடந்த 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதில், திண்டிவனம் நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், தி.மு.க., நகர செயலாளர், கண்ணன், பொருளார் கண்ணன், நகர்மன்ற துணைத் தலைவர் ராஜலஷ்மி வெற்றிவேல், அரசு வழக்கறிஞர் ஆதித்தன், கவுன்சிலர்கள் பிர்லா செல்வம், சின்னச்சாமி, லதாசாரங்கபாணி, பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.