உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்

 சேத்துார்; தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை தவம் பெற்ற நாயகி, நச்சாடை தவிர்த்தருளிய சுவாமிக்கு அபிஷேகம் நடந்து கொடி மரத்திற்கு அபிஷேகம், பூஜையை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. திருவிழா காலங்களில் தினமும் சுவாமி, அம்பாள் கற்பக தரு, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. தேர் திருவிழா ஜூன் 8ல் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் முருகன் தலைமையில் ஊழியர்கள் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !