தீர்த்தனகிரி சித்தி விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்
ADDED :299 days ago
புதுச்சத்திரம்; தீர்த்தனகிரி சித்தி விநாயகர் கோவிலில், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரி சித்தி விநாயகர் கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சந்தன காப்பு, அலங்காரம் இன்று நடந்தது. அதையொட்டி காலை 11.00 மணிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால், சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து நண்பகல் 1.00 மணிக்கு விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில், அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.