உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை;  மதுரை அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 


மதுரையின் மையப்பகுதியில் அமைய பெற்றதுமான கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் முன்பு சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வேதமந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் மதுரையில் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு தினமும் பெருமாள் தாயாருடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், சேக்ஷ வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 10ம் தேதி காலை திருத்தேரோட்ட வைபவமும், வரும் 12ம் தேதி இரவு தசாவதாரம் நிகழ்வும் நடைபெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !