உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி வைகாசி விசாகத் தேர்த்திருவிழா பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி வைகாசி விசாகத் தேர்த்திருவிழா பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

திருப்பூர்; வைகாசி விசாக தேர்த்திருவிழாவில், 63 நாயன்மார்களுக்கு பஞ்சமூர்த்திகளுக்கு காட்சியளித்தல் வைபவம் நாளை மாலை நடக்கிறது.

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று அதிகாரநந்தி, யாழி வாகனம், கற்பக விருட்ச வாகனத்தில், சுவாமிகள் திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர். விநாயகர், சோமாஸ்கந்தர், விசாலாட்சியம்மன், வள்ளி தெய்வானை சதேம சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம், நாளை மாலை நடக்கிறது.  தேர்த்திருவிழாவில், வரும், 9ம் தேதி விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், 10ம் தேதி வீரராகவர் தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, தேர் அலங்காரப்பணிகள் நேற்று துவங்கியுள்ளது. நாளை, திருக்கல்யாண உற்சவமும், அதனை தொடர்ந்து 9 மற்றும் 10 ம் தேதிகளில் தேரோட்டமும் நடைபெறுமென, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !