சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :167 days ago
விழுப்புரம்; சித்தேரிக்கரை சிவசக்தி மாரியம்மன் கோவிலில் 50ம் ஆண்டு சாகை வார்த்தல் திருவிழா கடந்த 4ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 5ம் தேதி காலை 9.00 மணிக்கு, வேடப்பர் என்கிற தாண்டேஸ்வரர் கோவிலிருந்து பக்தர்கள் பால்குடம் ஊர்வலம் சென்று சிவசக்தி மாரியம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். இரவு 7.00 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, உலக நலன் வேண்டி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.