மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்
ADDED :134 days ago
மதுரை; மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
மதுரையின் மையப்பகுதியில் அமைய பெற்றதுமான கூடலழகர் பெருமாள் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழா ஜூன்2ல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் பெருமாள் தாயாருடன் அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், சேக்ஷ வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று 10ம் தேதி காலை திருத்தேரோட்ட வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வரும் 12ம் தேதி இரவு தசாவதாரம் நிகழ்வு நடைபெறும்.